கரூர் தாந்தோன்றி நகரத்திற்குள்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், குடியிருப்பு ஆக்கிரமிப்பு காரணமாக மழைநீர் வெளியேற முடியாமல் குடியிருப்புப் பகுதிகளுக்குள் தேங்கிவருகிறது.
கரூர் நகராட்சி வடிகால் அமைக்க முற்பட்டபோது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் வடிகால் அமைக்கும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.
இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்து நிலையில், இன்று நீதிமன்ற அனுமதியுடன் கரூர் நகராட்சி அலுவலர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள் காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்புப் பகுதியை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி கரூரில் ஆக்கிரமிப்புப் பகுதிகள் அகற்றம்! - Occupied areas removed in Karur
கரூர்: கரூர் நகராட்சிக்குள்பட்ட திண்ணாப்பாநகர் பகுதியில் நீதிமன்ற உத்தரவுபடி, ஆக்கிரமிப்புப் பகுதிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.