கரூர்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் பெயிண்டர் சரவணன். இவரது மகன் சந்தோஷ் (16) அரவக்குறிச்சி அருகே உள்ள காக்காவாடி பி.ஏ. வித்யா பவன் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி, 11 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்றிரவு மாணவனுக்கு தலைசுற்றல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் மாணவனை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாணவனின் உடல் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாணவனின் தந்தை சரவணன் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், காவல் ஆய்வாளர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்துள்ளார். பள்ளி விடுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காற்றாலை இறக்கை மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து