ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போன மதுரை மாவட்டத்தின் அலங்காநல்லூர் போல் சேவல் சண்டைக்கு, கரூர் மாவட்டத்தின் அரவக்குறிச்சியிலுள்ள பூலாம் வலசு கிராமம் பெயர் பெற்றது. பூலாம் வலசில் சில ஆண்டுகளாக சேவல் சண்டை நடைபெறாத நிலையில், 2019ஆம் ஆண்டு நீதிமன்றத்தின் பல்வேறு நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடைபெற்றது.
இச்சூழலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இம்மாவட்டத்தில் நடக்கவுள்ள சேவல் சண்டையில் கலந்து கொள்வதற்காக, சண்டைச் சேவல்களுக்குத் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தீபாவளி, பொங்கல், ஆடி - 18 உள்ளிட்ட விழா காலங்களில் சேவல் சண்டைப் போட்டி முக்கிய நிகழ்வாக, இப்பகுதியில் கருதப்படுகிறது.
ஸ்டெர்லைட்டை திறக்கக்கோரிய வழக்கின் தீர்ப்பு - தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
ஜனவரி, 14ஆம் தேதி தொடங்கி, நான்கு நாள் முதல், 5 நாள் வரை சேவற்கட்டு எனப்படும் சேவல் சண்டைப்போட்டி நடக்கும். கரூர் மாவட்டம் கோவிலூர், மற்றும் பூலாம்வலசு கிராங்களில் காலம் காலமாக நடந்து வரும் இந்த சேவல் சண்டையில் பங்கேற்க, தமிழ்நாடு மட்டுமின்றி, வெளிமாநிலங்களான ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள்.
'நானா படேகர் உண்மையை ஒப்புக்கொள்ளும் வரை ஓயமாட்டேன்' - தனுஸ்ரீ வார்னிங்
இது குறித்து சேவல் வளர்ப்பவர்கள் கூறுகையில், ' திருவிழா காலங்களில் நடக்கும் சேவற்கட்டு சண்டைக்கு வள்ளூர், கீரி, மயில், செங்கருப்பு, பூதம், ஆந்தை உள்ளிட்ட இன சேவல்களை சண்டைக்குப் பயன்படுத்துகிறோம். சேவற்சண்டைக்காகவே நாங்கள், கட்டு சேவலை வளர்த்து வருகிறோம்.
'தர்பார்' படம் வெற்றி பெற மண் சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள்
இந்த சண்டை சேவல்களுக்கு நான்கு மாதத்தில், கிணற்றிலோ, அல்லது வாய்க்காலிலோ நீந்த விட்டு பயிற்சி அளிக்கப்படுவதால், காலில் பலம் கூடும்' என்றார்.
தமிழர் பாரம்பரிய விளையாட்டு சேவல் சண்டை. அதனால் அதற்கு நீதிமன்றத்தில் நிரந்தர அனுமதி வாங்கித் தர வேண்டும் என சேவல் சண்டைப் பிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.