கரூர் மாவட்டம் மாயனூர் காவல் நிலைய சரகம் பகுதிக்குட்பட்ட காவிரி ஆறு மாயனூர் கதவணையில் ஆயுதப்படை காவலர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.
கரூர் மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு மாயனூர் காவிரி ஆறு வாய்க்கால்களில் காவலர்களுக்கு ஆற்றை கடத்தல், மீட்டல், பேரிடர் காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு (River cross training demo) குறித்து தீயணைப்பு தலைமை அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஆயுதப்படை காவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
இந்தப் பயிற்சிக்கு தலைமை துணை காவல் கண்காணிப்பாளர் அய்யாச்சாமி, ஆய்வாளர் சகிரா பானு, தீயணைப்பு படையினர், தீயணைப்பு நிலை அலுவலர், காவலர் ஆகியோர் கலந்துகொண்டு ஆயுதப்படை காவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
இதையும் படிங்க:மாணவியுடன் நாடகக் காதல் - பாமக வட்ட செயலாளர் கைது