கரூர் மாவட்டத்தில் முதன் முறையாக கரூர் நகர காவல்நிலையம், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம், வெங்கமேடு, பசுபதிபாளையம், தாந்தோன்றிமலை, வெள்ளியணை, வாங்கல் உள்ளிட்ட 7 காவல் நிலையங்களில் உள்ள நடவடிக்கை எடுக்காத புகார்கள் மீது, இரு தரப்பு வாதங்களை விசாரித்து தீர்வு காணும் பெட்டிசன் மேளா நடைபெற்றது.
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த மேளாவில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முகேஷ் ஜெயக்குமார், காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு புகார்களை விசாரித்தனர்.
அதில் 60-க்கும் மேற்பட்ட புகார்கள் மீதான விசாரணை நடைபெற்றது. முன்னதாக விசாரணைக்கு வருபவர்களை முகக் கவசம் அணிவிக்க அறிவுறுத்தி, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து உள்ளே அனுமதித்தனர்.
இதையும் படிங்க: 'பணப்புழக்கத்தை அதிகரிக்கக் கடன் மேளா!' - நிர்மலா சீதாராமன்