கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் உத்தரவின்பேரில் கரூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பொதுமக்கள் அன்றாடம் அளிக்கும் மனுக்களை, கரோனா பரவிவரும் காலங்களில் 144 தடை உத்தரவு உள்ளதால் வீட்டுக்கே வந்து விசாரிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டுவருகிறது.
அதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில் இதுவரை இந்த முறையின்கீழ் 46 மனுக்கள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. இன்று (அக்டோபர் 7) 10 மனுக்கள் விசாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.
மேலும் இது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
இது தொடர்பாக பொதுமக்கள் அன்றாடும் அளிக்கும் மனுக்களை உடனடியாக விசாரித்து முடிக்க வேண்டுமென உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர் அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
வீட்டுக்கே வந்து மனுக்களை விசாரிக்கும் காவல் துறை - பொதுமக்கள் வரவேற்பு
கரூர்: புகார் மனுக்களை காவல் துறையினர் வீடுகளுக்கே வந்து விசாரிக்கும் நடைமுறைக்கு பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.