கரூர் - தாராபுரம் செல்லும் சாலை சேங்களாபுரம் அருகில் பள்ளபாளையத்தைச் சேர்ந்த விவசாயி சந்தானம் (72) என்பவர் அப்பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது அவருடைய ஆடு கிணற்றில் தவறி விழுந்துவிட்டது என்று கூறப்படுகிறது. ஆட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் சந்தானமும் கிணற்றில் இறங்கியுள்ளார். ஆனால், ஆட்டை அவரால் மீட்க முடியாமல், நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
ஆடு கத்தும் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் கிணற்றில் இறங்கி ஆட்டை உயிருடன் மீட்டனர். கிணற்றின் மேல் வேட்டி, சட்டை, செருப்பு ஆகியவை இருந்ததால் முதியவரும் கிணற்றுக்குள் இறங்கியிருக்கலாம் என சந்தேகமடைந்த மக்கள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளித்தனர்.
அதன்பின்பு அங்கு வந்த கரூர் தீயணைப்புத் துறையினர், கிணற்றில் இறங்கி உயிரிழந்த முதியவர் சந்தானத்தின் உடலைமீட்டு, கரூர் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
![former](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6170728_05.jpg)
முதியவரின் உயிரிழப்பு குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்டை காப்பாற்றச் சென்ற முதியவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தது, அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: சேந்தமங்கலம் அருகே செஞ்சூரி அடித்த முதியவர்!