தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்குட்பட்ட அனக்கரை பகுதியைச் சேர்ந்தவர் முத்து. விவசாயியான இவரை கடந்த மாதம் 22ஆம் தேதி விசாரணைக்காக வனத்துறையினர் அழைத்துச் சென்றனர். மறுநாள் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனையில் அவசர அவசரமாக உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விவசாயி முத்துவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி இன்று (ஆக. 14) புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசை கண்டித்தும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.