கரூரை அடுத்த வெள்ளியனை பகுதியில் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் இருந்த முள் காடு திடீரென தீ பற்றி எரிந்தது. அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் தீ வேகமாக பரவியது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
இதையும் படிங்க: மாநகராட்சி குடிநீர் குழாயில் சோப்பு போட்டு குளித்த சமூக ஆர்வலர்...