ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 18ஆம் தேதி தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு இயற்கை மண் சிகிச்சை முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மண் சிகிச்சைக்கு முக்கியத்துவம் கொடுத்து யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவின் சார்பில் உடலில் மண் பூசி இயற்கை முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில், கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரோஸி வெண்ணிலா யோகா மற்றும் இயற்கை மருத்துவம் வாழ்வியல் மையத்தின் உதவி மருத்துவ அலுவலர் சுகுமார் உள்ளிட்டோர் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தனர்.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், “மண் சிகிச்சை மூலம் மேற்கொண்டால் உடலில் உஷ்ணம் குறையும். கழிவுகள் வெளியேறும். தோல் நோய்கள் குணமாகும். இந்த சிகிச்சை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த முகாம் நடைபெற்றது” என்றனர்.
இதையும் படிங்க:
ரூ. 98 கோடி மதிப்பில் 2,757 நபர்களுக்கு நலத் திட்டங்கள் வழங்கல்!