ETV Bharat / state

துாய்மைப் பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்க ஆணையத் தலைவர் வலியுறுத்தல்! - venkatesan

Karur news: தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யும் விதமாக, தேசிய தூய்மை பணியாளர் ஆணைய குழு தலைவர் கரூரில் ஆய்வு செய்தார்.

துாய்மைப் பணியாளர் நலன் மற்றும் மறுவாழ்வு கூட்டம்
தேசிய துாய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2023, 1:55 PM IST

தேசிய தூய்மை பணியாளர் ஆணைய குழு தலைவர் கரூரில் ஆய்வு

கரூர்: தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய குழு தலைவர் வெங்கடேசன், கரூரில் தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் இடங்களில், நேற்று (நவ.16) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு குறைகளை கோரிக்கைகளாக முன் வைத்தனர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், துாய்மைப் பணியாளர் நலன் மற்றும் மறுவாழ்வு குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில், தேசிய துாய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாலம்மாள்புரம் தூய்மைப் பணியாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பில், பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா, சம்பளம் முறையாக குறித்த நேரத்தில் கொடுக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன் பேசியதாவது, “துாய்மைப் பணியாளர்களின் நலனிற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தோரணக்கல்பட்டி அடுக்குமாடி குடியிருப்பில், 22 துாய்மைப் பணியாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 133 துாய்மைப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது பாலம்மாள்புரம் பகுதி குடியிருப்பில் நிரந்தர துாய்மைப் பணியாளர்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தித் தருவதற்கு கோரிக்கையை வைத்துள்ளனர். எனவே, குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருவதற்கு, உடனடி நடவடிக்கையாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், தூய்மைப் பணியாளர்கள் நலன் மற்றும் மறுவாழ்வு குறித்து நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தில், தூய்மைப் பணியாளர்களின் சேமநல நிதிக் காப்பீட்டு திட்டம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தேசிய தூய்மைப் பணியாளர் நிதியுதவி கழகத்தின் சார்பில், தூய்மைப் பணியாளர்களுக்கு வங்கிக் கடன் உதவி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்களுக்கு, அரசு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத் தொகை சரியான நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இது தவிர ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் முழுமையாக சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து நகராட்சி, பேரூராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி, மாநகராட்சி ஆணையாளர் சரவணக்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சண்முகவடிவேல், மாநகராட்சி சுகாதார அலுவலர் லட்சியவர்ணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: திருச்செந்தூர் கோயில் தரிசனக் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம்.. பக்தர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.