ETV Bharat / state

தனி இடஒதுக்கீடு - நாடார் சங்கம் கோரிக்கை - naadar peramaippu

நாடார் சமூகத்திற்கு 15 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என இந்திய நாடார்கள் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தனி இடஒதுக்கீடு - நாடார் சங்கம் கோரிக்கை

author img

By

Published : Aug 3, 2021, 9:25 AM IST

கரூர் : அகில இந்திய நாடார்கள் பேரமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வைகை ரவி தலைமையில் கரூர் தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் ராகம் சௌந்தரபாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது:

"பனைமரம் ஏறும் தொழில் நசிந்து வருகிறது. அனைத்து தொழில்களையும் பாதுகாப்பது போல பனைத் தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பனைத் தொழிலை பாதுகாக்க கள் இறக்கி விற்பதற்கு அனுமதி அளிக்கவேண்டும். டாஸ்மாக் கடையில் மது விற்பனை செய்வதைப் போல அரசு மதுபான கடைகளில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து கள் விற்பனையை தொடங்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.

தனி இடஒதுக்கீடு

இதேபோல தமிழகம் முழுவதும் நாடார் சமூகத்தினர் 15 % வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு 15 விழுக்காடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் 234 தொகுதிகளில் 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினால் 40 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அதனை அரசியல் கட்சிகள் ஏற்று உரிய அரசியல் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.

தனி இடஒதுக்கீடு - நாடார் சங்கம் கோரிக்கை
தனி இடஒதுக்கீடு - நாடார் சங்கம் கோரிக்கை

பனை வாரியம்

அதேபோல தமிழக அரசு பனை வாரியம் ஒன்றை உருவாக்கி பனைத்தொழில் மேற்கொள்ளும் நாடார் சமூகத்திற்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் பனை வாரியத்தில் உறுப்பினராக ஆக்க வேண்டும்.

நடவடிக்கை தேவை

பனை மரம் என்பது மாநிலத்தின் மரமாக விளங்குகிறது. சந்தன மரத்தை வெட்டி எடுத்துச் செல்வோர் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்கிறது. குண்டர் சட்டம் கூட பாய்கிறது. சந்தன மரத்தை வெட்டுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் போது ஏன் மாநில மரமாக விளங்கக்கூடிய பனை மரத்தை வெட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது. தமிழக அரசு மாநில மரத்தை காக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் சிவக்குமார் மாநிலத் துணைச் செயலாளர் லூர்து நாடார், கரூர் முருகேசன், மாவட்ட தலைவர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க :குடியரசு தலைவர் வருகை : நீலகிரியில் மூன்றடுக்கு பாதுகாப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.