ETV Bharat / state

அமைச்சர் செந்தில் பாலாஜி தானாக பதவி விலக வேண்டும் - அதிமுக முன்னாள் அமைச்சர் ம.சின்னச்சாமி - அமலாக்கத்துறை

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தானாக பதவி விலக வேண்டும் அதிமுக மாநில அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான ம.சின்னச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 20, 2023, 4:02 PM IST

கரூர்: அதிமுகவின் மாநில அமைப்பு செயலாளராக உள்ள முன்னாள் அமைச்சர் சின்னசாமி கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்த போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி புகாரில் நடைபெற்று வந்த நீதிமன்ற வழக்கில் உச்சநீதிமன்றம் தலையிட்டு முழுமையாக வழக்கை விசாரணை செய்ய வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அது இப்போதைக்கு சாத்தியமில்லாத ஒன்றுதான் என்றாலும், கேபினட் பொறுப்பில் உள்ள ஒரு அமைச்சரை நீதிமன்றம் தலையிட்டு விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளதால், முதலமைச்சர் என்ற அடிப்படையில் தனது அமைச்சரவையில் உள்ள ஒருவரை முதலமைச்சர் ஸ்டாலின் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

முதலமைச்சர் ஸ்டாலின் நினைத்தால் திமுகவின் மூத்த அமைச்சர்களான உள்ள துரைமுருகன், நேரு ஆகியோரை கூட நீக்க முடியும். ஆனால் செந்தில் பாலாஜியை நீக்க முடியாது. தமிழகத்தில் செந்தில் பாலாஜி செல்வாக்கு மிகுந்த அமைச்சராக வலம் வருகிறார். முதலமைச்சரின் மகன் அமைச்சர் உதயநிதி, மருமகன் வரை அனைவரிடமும் மிகவும் நெருக்கமான நபராக உள்ளார்.

அதிமுகவின் முக்கியமான கோரிக்கை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து விலக்கி விட்டு அவர் மீது உள்ள வழக்குகளை விசாரணை நடத்த வேண்டும் அல்லது செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் விசாரணை நியாயமானதாகவும் நேர்மையானதாகவும் இருக்கும். இந்த சூழ்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தானாக பதவி விலகுவது நல்லது. இந்த மூன்று கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், அதிமுக தலைமையிடம் பேசி அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிப்போம்.

ஏற்கனவே, அமலாக்கத்துறை விசாரணை நடத்திய போது, ஆந்திராவில் உள்ள அதிகாரியை நேரில் சந்தித்து சரி கட்டியவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதன் பின் விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என மத்திய அரசு நேரடியாக தலையிட்டுள்ளது.

செந்தில் பாலாஜியை பொறுத்தவரை, குறுக்கு வழியில் பல்வேறு கட்சிக்குள் நுழைந்து அதிகாரம் உள்ள பதவிகளை கைப்பற்றி வருகிறார். இனி டெல்லியில் சென்று அமித்ஷாவை சந்தித்து இப்பிரச்சனையில் இருந்து வெளியே வர பாஜகவில் இணைந்து தமிழகத்தின் மாநிலத் தலைவராக அண்ணாமலையை காலி செய்துவிட்டு, செந்தில் பாலாஜி அமர்ந்து கொள்ள கூட வாய்ப்பு உள்ளது.

இதுவரை நான் செந்தில் பாலாஜியை மேடையில் கூட விமர்சித்தது கிடையாது. இன்று நீதிமன்றமே தலையிட்டு விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என கூறி இருப்பதால், நான் இதுகுறித்து வலியுறுத்த வேண்டிய நிலையில் செய்தியாளர்களை சந்தித்துள்ளேன்.

எனவே, தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு திறமையும் ஆளுமையும் இருந்தால், செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணை நடத்த தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் அல்லது அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு அதிமுக சார்பில் வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அனைவருக்கும் முன்மாதிரியான நபராக இருக்க வேண்டும் கரூர் சட்டப்பேரவை தொகுதியில் இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த சட்ட பேரவை உறுப்பினரும் இதுபோன்ற தவறை செய்ததில்லை என தெரிவித்தார். தமிழக ஆளுநரிடம் இதுகுறித்து அதிமுக சார்பில் வலியுறுத்தப்படுமா என ஈ டிவி செய்தியாளர் கேட்டதற்கு, இது தொடர்பாகவும் திமுக அரசின் பல்வேறு முறைகேடுகள் குறித்து தமிழக ஆளுநரை சந்தித்து நாளை மனு அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: சட்ட விரோத மணல் கடத்தல் புகார் - அரசுக்கு மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.