ETV Bharat / state

கழிவு நீர் வாய்க்கால்கள் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்க உத்தரவு - அமைச்சர் செந்தில் பாலாஜி - கரூர் அண்மைச் செய்திகள்

கரூர் மாவட்டத்தில் புதிய கழிவு, மழை நீர் வாய்க்கால்கள் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யும்படி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை திறந்து வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான காணொலி

author img

By

Published : Oct 25, 2021, 6:23 AM IST

கரூர்: கரூர் சட்டப்பேரவைக்குள்பட்ட பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ. 2 கோடி மதிப்பிலான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி திறந்துவைத்தார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், கிராமப்புறங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.

சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி பஞ்சமாதேவி, மின்னாம்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் குடிநீர் தேவைக்காக ரூ. 2 கோடி மதிப்பிலான குடிநீர் நீர்த்தேக்க தொட்டிகள் திறக்கப்பட்டுள்ளன.

மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை திறந்து வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான காணொலி

கரூர் மாவட்டத்தில் புதிய கழிவுநீர், மழை நீர் வாய்க்கால்கள் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விளையாட்டு மைதானம், கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்.

காவிரி ஆற்றின் குறுக்கே நெரூர் பகுதியில் ரூ.700 கோடி மதிப்பீட்டில் புதிய கதவணை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதவிர கோயம்பள்ளி, மேலப்பாளைய,ம் பாலம்மாள்புரம், திருமாநிலையூர் ஆகிய பகுதிகளில் மூன்று புதிய தடுப்பணைகள் அமைக்கப்பட உள்ளது” என்றார்.

இதையும் படிங்க: திமுக தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை - ஓ பன்னீர்செல்வம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.