கரூர் பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறிக் கடை செயல்பட்டு வருகிறது. மேலும் அத்தியாவசிய மருந்துக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதற்காக காலை நேரத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கரூர் நகரப் பகுதிக்குள் வந்து செல்கின்றனர்.
அப்போது கரூர் நகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். மேலும் அந்த வழியாக வந்த பொதுமக்களிடம் தகுந்த இடைவெளி, முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினார். இந்த ஆய்வின்போது கரூர் நகராட்சி ஆணையாளர் சுதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் ஆகியோர் உடன் இருந்தனர்.