கரூர்: கரூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்கள், செயற்கைகால் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்கள்
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வி.செந்தில்பாலாஜி கலந்துகொண்டு 31 பேருக்கு, 18 லட்சத்து 86 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர்கள், செயற்கைக்கால் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அர்ச்சகர்களுக்கு உதவித்தொகை
தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர், பட்டாச்சாரியார், பூசாரிகள், கோயில பணியாளர்கள் ஆகியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு கரூர் ஐயப்ப சேவா சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி 10 கிலோ அரிசியுடன், 15 வகையான மளிகைப் பொருள்கள் தொகுப்பு, தலா ரூ.4,000 பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிவகாமசுந்தரி, மாணிக்கம், இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 2021-22 ஆம் நிதியாண்டிற்கான பாமக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு!