போரூர் அடுத்த செட்டியார் அகரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (52). மதுரவாயல் காவல் நிலையத்தில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 10ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்தபோது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்தார்.
பின்னர், சிகிச்சைப் பலனின்றி நேற்றிரவு (ஏப்ரல் 26) உயிரிழந்தார். அவரது உடல் இன்று (ஏப்ரல் 27) அபிராமபுரத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் சுகாதாரத் துறை அலுவலர்களால் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. கரோனா தாக்கத்தால் காவலர் உயிரிழந்த சம்பவம் காவல் துறையினர் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் பறிமுதல்!