கரூர்-திருச்சி சாலையில் மாயனூர் அருகேயுள்ள திருக்காம்புலியூர் என்ற இடத்தில் திருச்சியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கரூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது.
இதனிடையே, புலியூரிலிருந்து கரும்பை ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதியதில், டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் காயமடைந்தோரை மீட்டு கரூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : திருமணமான பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய கும்பல்