கரூர்: ஆசிரியராக பணிபுரிந்து, நாட்டின் மிக உயர் பதவியான ஜனாதிபதி பதவியை வகித்த டாக்டர் ராதாகிருஷ்ணனை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் அவரது பிறந்த நாளான செப். 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில், மாவட்டம் தோறும் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
இன்று (செப்.5) ஆசிரியர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுவதை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு 2021 ஆம் ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் இந்த விருதிற்காக 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விருதுக்கு தேர்வானவர்கள்.
1. ப.சக்திவேல், தலைமை ஆசிரியர், மணவாடி அரசு மேல்நிலை பள்ளி.
2. பெ.தனபால், முதுகலை இயற்பியல் ஆசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி பஞ்சப்பட்டி.
3. ஆர்.ராஜசேகரன், முதுகலை ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணராயபுரம்.
4. பெ.ராஜேந்திரன், இடைநிலை ஆசிரியர், க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி.
5. த.கண்மணி, தலைமை ஆசிரியை, ஆண்டான்கோயில் புதூர் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
6. முதல்வர் த.பிராகசம், கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
7. வி.பி.செல்வராஜ், உடற்கல்வி ஆசிரியர், புலியூர் கவுண்டம்பாளையம் டாக்டர் எம்.ஏ.எம் ராமசாமி செட்டியார் அரசு உயர்நிலைப்பள்ளி
8. ஆ.உமா, இடைநிலை ஆசிரியை, மணவாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி.
9. இரா.ஜெய்குமார்,அறிவியல் ஆசிரியர், பஞ்சப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.
10.கோ.பெரியசாமி, சிறப்பு நிலை விரிவுரையாளர், மாயனூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் .
விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் நாளை (செப். 6) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கூட்டரங்கில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் விருதினை வழங்கி பாராட்டு தெரிவிக்கவுள்ளார்.
இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு பாஸான 86 வயது மு. முதலமைச்சர்!