கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால் கரூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மின் நுகர்வோர் பயன்பாடு அதிகரித்துள்ளது. கரூர் காந்தி கிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மின் இணைப்பு பாலம்மாள்புரம் துணை மின் நிலையத்தில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதே இணைப்பில் கரூர் காந்தி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மின் இணைப்பில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவது வாடிக்கையாக இருந்தது.
கரோனா சிசிக்கைக்கு வரும் நோயாளிகளின் நலன் கருதி, தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாட்டில் , எஸ்.வெள்ளாளப்பட்டி துணை மின்நிலையத்தில் ரூ.1.5 கோடி செலவில் புதிய உயர் அழுத்த மின் பாதை சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்குச் செல்லும் வகையில் நடைபெற்று முடிந்தது. இதனை இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு , அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் நவீன தொழில்நுட்பம்( Covered Conductor) மூலம் மின்கம்பிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் திமுக தலைவர் முதலமைச்சராக பொறுப்பேற்கும் முன் கரோனா நோயாளிகளுக்கு சுமார் 291 ஆக்சிஜன் படுக்கைகள் மட்டுமே இருந்தன. தற்போது 1,300 ஆக்சிஜன் படுக்கைகள் அளவுக்கு உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
கரூர் அரசு மருத்துவமனைக்கு மும்முனை மின்சாரம்: அமைச்சர் தொடங்கி வைத்தார். - அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
கரூர்: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 1.5 கோடி செலவில், ஏற்படுசத் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இன்று(ஜூன் 3) அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.