ETV Bharat / state

திருநங்கையை தேடி சென்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவன்! - Karur student missing Case

கரூர்: திருநங்கையை தேடி சென்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை மீட்டு தரக்கோரி பெற்றோர் காவல் துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Karur student missing Cases
Karur student missing Cases
author img

By

Published : Jun 10, 2020, 9:34 PM IST

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா பகுதிக்கு உள்பட்ட பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் மோனிக் (17). இவர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆறாம் தேதி நீட் தேர்வு எழுதுவது தொடர்பாக விண்ணப்பம் வாங்கி வருவதாக தாய் தந்தையிடம் கூறி விட்டு சென்ற மகன் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அண்ணாதுரை அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மோனிக், திருநங்கையை தேடிச் பெங்களூரு சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து மோனிக் பெற்றோர் திருநங்கையிடம் இருந்து மகனை மீட்டுத் தரக்கோரி காவல்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.