ETV Bharat / state

காவல்துறை தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய எஸ்பி - தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கரூர்: ஆயுதப்படை வளாகத்தில் உள்ள தியாகிகள் நினைவுத் தூணில் காவல்துறையில் பணியின்போது உயிர்நீத்த தியாகிகளுக்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

காவல் கண்காணிப்பாளர் அஞ்சலி
காவல் கண்காணிப்பாளர் அஞ்சலி
author img

By

Published : Oct 21, 2020, 7:52 PM IST

நாடு முழுவதும் அக்டோபர் 21ஆம் தேதி காவல்துறையில் உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வானது 1959ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி இந்தியா - சீனா எல்லையில் நடைபெற்ற போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும் வகையில், இந்நாளில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படை காவல் கண்காணிப்பாளர் அய்யர் சாமி ஏற்பாட்டில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

காவல் கண்காணிப்பாளர் அஞ்சலி
காவல் கண்காணிப்பாளர் அஞ்சலி

பின்னர், கடந்த ஆண்டு இந்தியாவில் உயிர் தியாகம் செய்த 264 காவல்துறை வீரர்களுக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 காவல்துறை வீரர்களுக்கும், 1999ஆம் ஆண்டு பணியின்போது உயிர் தியாகம் செய்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவராமன் என்ற காவலருக்கும் 27 குண்டு முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

காவலர்கள் அஞ்சலி
காவலர்கள் அஞ்சலி

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், ராதாகிருஷ்ணன், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.