கரூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி இன்று தனது இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையை மண்மங்கலம், ஆத்தூர், தான்தோன்றிமலை, ராயனூர் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “கரூர் மாவட்டத்தில் திமுக போட்டியிடும் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், தேர்தல் பணியாற்றிய கூட்டணிக் கட்சிகள், திமுக பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்று தேர்தல் பரப்புரைக்கு மட்டும் இறுதி நாள் அல்ல, அதிமுக அரசுக்கும் இறுதிநாள். அடிமை எடப்பாடி பழனிசாமி அரசுக்கும் இறுதிநாள்.
வாக்காளர்களாகிய நீங்கள் வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள். என் உயிர் உள்ளவரை என் முழு அரசியல் வாழ்க்கையை இந்தத் தொகுதி மக்களுக்காக அர்ப்பணிக்கிறேன். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை 234 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்வோம் என அனைவரும் உறுதி ஏற்போம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாநிலம் முழுவதும் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்