கரோனாவிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், தொற்றின் பரவல் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த நிலையில், மக்கள் சுயக் கட்டுப்பாட்டோடு வீட்டில் இருக்க வேண்டும், வெளியே செல்லும் போது முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் ஆகிய விழிப்புணர்வுகளை அரசு மேற்கொண்டாலும் மக்கள் அலட்சியமாக முகக் கவசம் கூட அணியாமல் வெளியே சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் கரோனா பாதிப்பு பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் கார்த்திகேயன் காந்தி வேடமணிந்து "விழித்திருப்போம், விலகி இருப்போம், வீட்டில் இருப்போம்" என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு கரூர் நகர பகுதிகளில் வலம் வந்தார்.
இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கரோனா காலத்திற்காக கண்டுபிடிக்கப்பட்ட கோயில் மணி!