கரூர் ரோட்டரி சங்கம், இந்திய தொழில் கூட்டமைப்பு, மாவட்ட தொழில் அதிபர்கள் இணைந்து 18 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய 100 ஆக்சிசன் சிலிண்டர்களை தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் கரூர் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே, சுகாதார துறை இணை இயக்குநர் மருத்துவர் ஞானக்கண் பிரேம் நிவாஸ், ரோட்டரி சங்கத்தின் கரூர் மாவட்ட முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ணன், ரோட்டரி சங்க துணைநிலை ஆளுநர்கள் அர்ஜுன், சுந்தரராஜன் உள்ளிட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் இளங்கோ, அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் 60 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆக்சிஜன் தேவை மிக முக்கியம் என்பதால் 100 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டதாக ரோட்டரி சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர்: ஜாமீன்கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு!