கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக தமிழ்நாடு அரசு ஞாயிறு பொதுமுடக்கம், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், கரூர் நகராட்சிக்குள்பட்ட மதுபான கடையில் நேற்று (ஏப்ரல் 24) மதுப்பிரியர்கள் மதுபானங்கள் வாங்க கூடினர். அப்போது முகக்கவசம், தகுந்த இடைவெளி உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாமல் மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.
அதேபோல் கரூர் நகர்ப் பகுதியில் உள்ள வெங்கமேடு, தாந்தோணிமலை, காந்திகிராமம், வேலுச்சாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மீன், இறைச்சிக் கடைகளிலும் பொதுமக்கள் முகக்கவசம், தகுந்த இடைவெளி உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாமல் பொருள்களை வாங்கிச் சென்றனர்.
இதனால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.