ETV Bharat / state

ஜகபர் அலி கொலை எதிரொலி: கனிமவளத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை! - JAGABAR ALI MURDER CASE

கனிம வள கொள்ளைக்கு எதிராக போராடி உயிரிழந்த ஜகபர் அலி வழக்கில் தொடர்புடைய நபர்களின் குவாரிகளில் கனிமவளத்துறை அதிகாரிகள் ட்ரோன் உதவியுடன் கற்கள் வெட்டி எடுத்த பகுதிகளை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

கனிமவளத்துறை அதிகாரிகள் சோதனை செய்யும் காட்சி
கனிமவளத்துறை அதிகாரிகள் சோதனை செய்யும் காட்சி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2025, 3:42 PM IST

புதுக்கோட்டை: சட்டவிரோத கனிமக் கொள்ளைக்கு எதிராக போராடிய ஜகபர் அலி, கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக அவர் குற்றம்சாட்டிருந்த துளையானூரில் உள்ள ராசு, ராமையா ஆகியோருக்குச் சொந்தமான கல்குவாரிகளில் திருச்சி, நாகப்பட்டினம், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கனிமவளத்துறை அதிகாரிகள் ட்ரோன் உதவியுடன் கற்கள் வெட்டி எடுத்த பகுதிகளை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

கனிம வள கொள்ளைக்கு எதிராக போராடிய அதிமுக, முன்னாள் கவுன்சிலரும், மாவட்ட ஆமெச்சூர் கபடி கழகத்தின் தலைவருமான ஜகபர் அலி (58), ஜனவரி 17ஆம் தேதி இருசக்கர வாகனத்தின் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த மினி டிப்பர் லாரி மோதி உயிரிழந்தார். பின்னர், ஜகபர் அலி உயிரிழந்ததை அறிந்த அவரது உறவினர்கள் திருமயம் அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.

மேலும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், திருமயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், ஜகபர் அலியின் மனைவி மரியம் திருமயம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த புகாரில், திருமயம் அருகே உள்ள துளையானூர் வளையன்வயல் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.ஆர் நிறுவனங்களின் உரிமையாளர்களான ராசு மற்றும் ராமையா ஆகியோர் கனிமவள கொள்ளையில் ஈடுபடுவதை ஜகபர் அலி தடுப்பதற்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும், அதற்காக பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த அவர்கள், நேரடியாகவே ஜகபர் அலியை தொடர்ந்து இதுபோல் செயல்பட்டால் லாரியை ஏற்றி கொன்று விட்டு விபத்து நடந்தது போல் காட்டி விடுவோம் என்று மிரட்டி வந்தனர்.

மேலும், ஆனால் அதனை பொருட்படுத்தாமல் தனது கணவர் ஜகபர் அலி கனிமவள கொள்ளைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து தொடர்ந்து புகார் அளித்து வந்ததால், ஆத்திரமடைந்த ராசு மற்றும் ராமையா ஆகிய இருவர் மினி லாரி வைத்துள்ள ராசுவின் நண்பரான முருகானந்தம் உதவியுடன் சதி திட்டம் தீட்டி தனது கணவர் ஜகபர் அலியை விபத்து ஏற்படுத்தி கொலை செய்து விட்டனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரைத் தொடர்ந்து, திருமயம் காவல்துறையினர் கல்குவாரி உரிமையாளர்கள் ராசு மற்றும் ராமையா விபத்து ஏற்படுத்திய மினிலாரி உரிமையாளர் முருகானந்தம் மற்றும் மினி லாரி ஓட்டுநர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த காசிநாதன் ஆகிய நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்ததையடுத்து, நேற்று முன்தினம் மாலை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட ஜகபர் தலையில் உடலை பெற்ற உறவினர்கள் அவரை அடக்கம் செய்தனர்.

இந்த நிலையில், லாரி ஓட்டுநர் முருகானந்தம் தான் விபத்தை ஏற்படுத்தியது என்று சரணடைந்த நிலையில் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, காவல்துறையினர் விபத்து நடந்த பகுதியைச் சுற்றியுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் முருகானந்தம் அந்த லாரியை ஒட்டி வந்தவர் அல்ல என்பதும், லாரி ஓட்டி வந்தவரை அழைப்பதற்காக வந்தவர் என்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து, அவரிடம் கூடுதலாக விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, குவாரி உரிமையாளர் ராசு மற்றும் ராமையாவுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஜகபர் அலி செயல்பட்டதால், ராசுவின் மகன் தினேஷ்குமார் மற்றும் ராசு மற்றும் ராமையா ஆகியோர், 407 மினிலாரி வைத்துள்ள ராசுவின் நண்பரான முருகானந்தத்தின் உதவியோடு, ஜகபர் அலியை லாரியை வைத்து மோதி விபத்து ஏற்படுத்துவதைப் போல் காட்டி அவரை கொலை செய்ய சதித்திட்டம் திட்டியுள்ளனர்.

பின்னர் ராமநாதபுரத்திலிருந்து மினி லாரியை ஓட்ட காசிநாதன் என்பவரை வரவழைத்து அவர் மூலம் முருகானந்தத்தின் மினி லாரியை வைத்து தொழுகை முடிந்து இருசக்கர வாகனத்தில் சென்ற ஜகபர் அலியை மோதி கொலை செய்ததை லாரி உரிமையாளர் முருகானந்தம் ஒப்புக்கொண்டுள்ளார். ஏற்கனவே நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்திருந்த காவல்துறையினர் ராசுவின் மகன் தினேஷ்குமாரையும் இந்த வழக்கில் சேர்த்து மொத்தம் ஐந்து பேர் மீது வழக்குப் பதிந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.

அந்த வகையில், குவாரி உரிமையாளர் ராசு (54) அவரது மகன் தினேஷ்குமார் (25) 407 மினி லாரி உரிமையாளர் முருகானந்தம் (56) அந்த லாரியை ஓட்டி வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த காசிநாதன் (45) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி பின்னர், நேற்று காலை திருமயம் மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இந்த நிலையில், பிப்ரவரி 3ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கோபால கண்ணன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர்கள் நான்கு பேரும் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்கப்பட உள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குவாரி உரிமையாளர் ராமையா தலைமறைவாக இருப்பதால் அவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: "பெரியார் சீர்திருத்தவாதி?.. சீமான் பேசியது தப்பே கிடையாது" - ஜான்பாண்டியன் கருத்து!

இதற்கிடையே, ஜகபர் அலி விபத்து ஏற்படுத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்த குவாரி உரிமையாளர்கள் மட்டுமின்றி மற்ற குவாரி உரிமையாளர்களுக்கும் இதில் தொடர்பு இருக்கிறதா? என்பதை காவல்துறையினர் தொடர்ந்து விசாரிக்க வேண்டும் எனவும், அது மட்டும் இன்றி ஜகபர் அலி வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் கனிமவளத்துறை அதிகாரி ஆகியோரிடம் சட்ட விரோத கல் குவாரிக்கு எதிராக மனு கொடுத்து வந்தால் மனு கொடுத்த அடுத்த நிமிடமே சம்பந்தப்பட்ட கல்குவாரி உரிமையாளர்களுக்கு அவர் மனு கொடுத்த விவகாரம் தெரிந்து கல்குவாரி உரிமையாளர்களால் தொடர்ந்து ஜகபர் அலி மிரட்டப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதனால் இந்த விவகாரத்தில் அரசு அலுவலர்கள் அதிகாரிகள் காவல்துறையினருக்கும் தொடர்புள்ளதா? என்பதை விசாரணை செய்ய வேண்டும் எனவும், அதுமட்டுமின்றி காவல்துறையினர் விசாரணை போதுமானதாக இல்லை என்றால் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், சட்டவிரோத கனிமக் கொள்ளைக்கு எதிராக போராடிய ஜகபர் அலி குவாரி படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவர் குற்றம் சாட்டிருந்த துளையானூரில் உள்ள ராசு, ராமையா ஆகியோரக்கு சொந்தமான ஆர்ஆர் கல்குவாரிகளில் திருச்சி, நாகப்பட்டினம், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கனிமவளத்துறை அதிகாரிகள் ட்ரோன் உதவியுடன் கற்கள் வெட்டி எடுத்த பகுதிகளை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.