கரூர்: தமிழ்நாட்டில் பரவலாக மழைப் பெய்து வருகிறது. இந்நிலையில், கரூரில் நேற்று(செப்.30) இரவு பெய்ய தொடங்கிய மழை தற்போதுவரை தொடர்ந்து விடாமல் பெய்து வருகிறது. இதன்காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் இன்று(அக்.01) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்த அறிவிப்பு தாமதமாக வெளியானதால். பல மாணவர்கள் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு வருகை புரிந்தனர். பின்னர் பள்ளிகள் மூலம் மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கரூர் மாவட்டத்தில், இன்று(அக்.1) காலை நிலவரப்படி அதிகபட்சமாக தோகைமலையில் மழை அளவு 80.மி.மீ மழை அளவும், அரவக்குறிச்சியில் 64.06 மி.மீ மழை அளவும் பதிவாகி உள்ளது.
கரூர் மாவட்டத்திலுள்ள கடவூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, பரமத்தி, கரூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இம்மாவட்டத்தில் மொத்தம் 448 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது, சாரசரியாக 37.மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: இந்த மாவட்டங்களில் எல்லாம் இடி மின்னலுடன் கூடிய கனமழை?