ETV Bharat / state

73rd Republic Day: 48லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் - குடியரசு தினத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

73ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட ஆட்சியர் சுமார் 48 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கரூர் மாவட்ட ஆட்சியர்
கரூர் மாவட்ட ஆட்சியர்
author img

By

Published : Jan 27, 2022, 7:18 AM IST

கரூர்: இந்தியத் திருநாட்டின் 73ஆவது குடியரசு தினவிழாவை முன்னிட்டு, கரூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் த. பிரபுசங்கர், தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறையின் மரியாதையினை ஏற்று, சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களையும், அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.

பின்னர் அனைவரிடமும் சமத்துவம் நிலவும் வகையில் சமாதானப் புறாக்களையும், தேசிய கொடி வண்ணத்திலான பலூன்களையும் பறக்கவிட்டார். அரசின் வழிகாட்டி நெறிமுறைகளின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தார்.

சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ்
சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ்

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர், கரோனா கட்டுப்பாடு பணிகள், முன்கள பணிகள், அலுவலக பணிகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், மருத்துவர்கள், காவல்துறை அலுவலர்கள், வருவாய்த் துறை மற்றும் வளர்ச்சித் துறை அலுவலர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளை சார்ந்த நபர்களை பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர்
கரூர் மாவட்ட ஆட்சியர்

இதையடுத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா 8 நபர்களுக்கும், சமூக பாதுகாப்புத் திட்ட உதவித் தொகை 10 நபர்களுக்கும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் தேய்ப்புப் பெட்டி 5 நபர்களுக்கும், தையல் இயந்திரம் 5 நபர்களுக்கும், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் எம்ராய்டரி தையல் இயந்திரம் 2 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.

மேலும் தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ரூ.12.68 லட்சம் மதிப்பிலான கடனுதவி 2 நபர்களுக்கும், வேளாண்மைத் துறையின் மூலம் இடுபொருட்கள் 2 நபர்களுக்கும், தோட்டக்கலைத்துறையின் மூலம் இடுபொருட்கள் 2 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.

நலத்திட்ட உதவிகள்
நலத்திட்ட உதவிகள்

பின்னர் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மூலம் பிரதம மந்திரி குடியிருப்பு ஊரகத் திட்டத்தின் கீழ் வேலை உத்தரவு ஆணைகள் 19 நபர்களுக்கும், கூட்டுறவுத் துறை மூலம் ஆதரவற்ற விதவைகளுக்கான கடனுதவி 2 நபர்களுக்கும் என மொத்தம் 62 பயனாளிகளுக்கு ரூ. 48,57,970 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் முத்துச்செல்வன், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் சைபுதீன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், நகராட்சி ஆணையர்கள் சுப்புராம், கனிராஜ், கோபாலகிருஷ்ணன், குளித்தலை வருவாய் கோட்டாச்சியர் புஷ்பாதேவி, மாவட்ட வழங்கல் அலுவலர் தட்சிணாமூர்த்தி, அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க :கோவையில் குடியரசு தின விழா; மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியேற்றினார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.