ETV Bharat / state

“வெளியே போயா” மனு கொடுக்க வந்த முதியவரை ஒருமையில் பேசிய ஆட்சியர் - மனு அளிக்க வந்த முதியவரை திட்டிய ஆட்சியர்

கரூரில் மனு அளிக்கச் சென்ற முதியவரை “வெளியே போயா” என ஆட்சியர் பிரபுசங்கர் ஒருமையில் பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதியவரை ஒருமையில் பேசிய ஆட்சியர்
முதியவரை ஒருமையில் பேசிய ஆட்சியர்
author img

By

Published : Mar 23, 2022, 11:16 AM IST

Updated : Mar 23, 2022, 3:12 PM IST

கரூர்: குளித்தலை அருகே மருதூர் ஊராட்சி விஸ்வநாதபுரம் சுப்பன் ஆசாரிகளத்தை சேர்ந்த கிராம மக்களுக்கு சாலை வசதி, தெரு விளக்குகள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், கவனத்தை ஈர்க்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அப்பகுதி மக்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோர் இணைந்து மனு அளிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களை அழைத்துக் கொண்டு அப்பகுதி இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கடந்த 21ஆம் தேதி மனு அளிக்கச் சென்றனர்.

அப்போது, அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளே நுழையும் போது, கைகளில் டிஜிட்டல் பேனர் எடுத்துக் கொண்டு ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்ல காவல் துறையினர் அனுமதிக்கவில்லை. இதனால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகளிடம் பள்ளிக் குழந்தைகள் ஆட்சியரை சந்திக்க அனுமதி கேட்டனர். பள்ளி குழந்தைகள் அனுமதிக்க முடியாது என கூறியதுடன் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்களுடன் வருகை புரிந்த கல்லூரி மாணவி ஒருவரும் அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவரும் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனர். மனுக்களைப் பெறும் கூட்ட அரங்கில் மனுவினை பெற்றுக் கொண்ட ஆட்சியர் பிரபுசங்கர், மனு அளிக்க வந்த பெரியவர் கோரிக்கை குறித்து பேச முற்பட்டார்.

முதியவரை ஒருமையில் பேசிய ஆட்சியர்

அப்போது, கரூர் மாவட்டத்தில் இல்லாத கரோனாவை காரணம் காட்டி கோரிக்கையை கூற விடாமல் ஆட்சியர் பிரபுசங்கர் இடமறித்ததாக தெரிகிறது. அப்போது கல்லூரி மாணவியும் பேச முற்றபட்டபோது கூட்டரங்கை விட்டு வெளியேறும்படி கூறினார். மேலும், பெரியவரை “வெளியில போயா” என இருமுறைக்கு மேல் ஆக்ரோசமாக கத்தினார். இதனைக் கண்ட அங்கிருந்த அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர்.

இதன் காணொளி சமூக வளைத்தளங்களிம், ஊடகங்களிலும் வைராலானதையடுத்து இது பேசும் பொருளாக மாறியுள்ளது. இதேநாளில் பாஜக பட்டியலின பிரிவில் முக்கிய பொறுப்பில் உள்ள தலித் பாண்டியன் புகழூர் வேலாயுதம்பாளையம் அண்ணாநகர் பகுதியில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலையை அகற்றியது தொடர்பாக மனு அளிக்க முற்பட்டபோது ஆட்சியர் பிரபுசங்கர் “வெளியே போடா” என ஒருமையில் பேசியது பாஜக கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தலைமையின் அறிவுறுத்தலின்படி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தலித் பாண்டியன் தெரிவித்தார். இதனிடையே மார்ச் 22ஆம் தேதி மதியம் மனு அளிக்க வந்த முதியவரும், பள்ளி மாணவிகளையும் குளித்தலை பகுதியிலுள்ள ஆசாரிபள்ளம் பகுதிக்குச் சென்று கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரோனா தொற்று காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளித்தது தொடர்பாக பெரணி அரசுப் பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்ற ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையாசிரியரை ஒருமையில் திட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் ஆசிரியர்கள் இனி கண்ணியமாக நடத்தப்படுவார்கள். இனிவரும் காலங்களில் கடுமையான சொற்கள் தவிர்க்கப்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கருக்கு பொதுமக்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என பண்பு பயிற்சி வழங்கிட தமிழக அரசை வலியுறுத்துவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துச்செல்வன் தெரிவித்ததுடன், எதிர்வரும் குளித்தலை தேவதானம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 13 சென்ட் நிலத்தில் 10 சென்ட் நிலம் காணாமல் போனது குறித்து பள்ளிக் குழந்தைகளுடன் எதிர்வரும் மார்ச் 28ஆம் தேதி மனு அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கவுரவமாக, பிச்சை எடுத்து கூட நடிகர் சங்க கட்டட பணிகளை நிறைவு செய்வோம் - விஷால்

Last Updated : Mar 23, 2022, 3:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.