இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"அரவக்குறிச்சி தொகுதியில், கரோனா நிவாரண நிதிக்காக எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் ஒதுக்கி மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினேன். ஆனால் நிவாரண நிதி வழங்கி 22 நாட்களாகியும் கரூர் மாவட்ட நிர்வாகம் அதன் மூலம் எந்த நிவாரண நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டாத தெரியவில்லை.
இதுகுறித்து அரவக்குறிச்சித் தொகுதி பேரூராட்சி, ஊராட்சி செயலாளர்களிடம் விசாரித்தபோது அவர்கள், நிவாரண நிதி குறித்து மாவட்ட நிர்வாகம் எந்தவித தகவலையும் அளிக்கவில்லை எனத் தெரிவித்தனர். அதையடுத்து மாவட்ட நிர்வாகத்திடம் விசாரித்த போது, நிதியை பயன்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுமதி கொடுத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது எனத் தெரிவித்தார். அதற்கு முன்னாத அவர், 550 ரூபாய் மதிப்புள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட தொகுப்பை கரூர் கோடங்கிபட்டி கிராம மக்களுக்கு வழங்கினார்.