அப்போது, கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் வார்டில் பணியாற்றும் மருத்துவரின் செல் எண்ணை மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் கேட்டுப் பெற்று மாவட்ட ஆட்சித்தலைவர், அனைவரின் முன்னிலையிலும் தனது செல்பேசியில் இருந்து மருத்துவருக்கு வீடியோ கால் மூலமாக தொடர்பு கொண்டு பேசினார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை காப்பாற்றும் அர்ப்பணிப்பு மிக்க பணியில் ஈடுபட்டுள்ள தங்களுக்கும், செவிலியர்களுக்கும், தூய்மைப்பணியாளர்களுக்கும் வாழ்த்துகள் என்று கூறிய மாவட்ட ஆட்சித்தலைவர், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உடல்நலம் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர், வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரிடம் வீடியோகால் மூலமாக பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் உங்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை வழங்கப்படுகின்றதா என்றும், மருத்துவர்கள், செவிலியர்கள் அவ்வப்போது பார்த்துக்கொள்கின்றார்களா, உங்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக சுவையானதாக இருக்கின்றதா என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த பாதிக்கப்பட்ட நபர், மருத்துவர்களும் செவிலியர்களும் நல்லமுறையில் கனிவாக பேசி கவனித்துக்கொள்கின்றனர். மேலும், எங்களின் பொழுதுபோக்கிற்கு தொலைக்காட்சிபெட்டி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நேரத்தில் தரமான, சுவையான உணவுகள் வழங்கப்படுகின்றது என்று தெரிவித்தார்.