தமிழ்நாட்டில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. மேலும், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 73 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் அமமுக வேட்பாளர் சாகுல் ஹமீது புகைப்படம், சின்னம் பெயர் இருபத்தி ஐந்தாவது வரிசையில் இருக்கிறது. இந்நிலையில், அண்ணாநகர் ரௌத்திரபுரம் வாக்குப்பதிவு மைய எண் 193 உடைய வாக்குப்பதிவு இயந்திரத்தை அலுவலர்களின் உதவியுடன் ஆளுங்கட்சியினர் மாற்றிவிட்டதாக சாகுல் ஹமீது வாக்குப்பதிவு மையத்திற்குள் புகுந்து தேர்தல் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட சாகுல் ஹமீதை காவல் துறையினர் தடுத்தி நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அமமுக வேட்பாளர் தேர்தல் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.