ETV Bharat / state

சாலையை பராமரிக்க தவறிய சுங்கச்சாவடி - மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையால் பணிகள் தீவிரம்

author img

By

Published : Jan 21, 2022, 5:05 PM IST

கரூர் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையால் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பராமரிப்பு பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Karur district collector Prabhushankar inspection
மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையால் பணிகள் தீவிரம்

கரூர் மாவட்டத்தில் இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடிகள் இயங்கி வருகின்றன. திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மணவாசியில் ஒரு சுங்க சாவடி, திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டிகோட்டை அருகே ஒரு சுங்கசாவடி என இரண்டு சுங்கச்சாவடி செயல்பட்டு வருகின்றன.

அரசு, தனியார் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் என இருசக்கர வாகனம் தவிர அனைத்து வாகனங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கரூர் மாவட்டத்தில் தனியார் நடத்தி வரும் மணவாசி சுங்கசாவடி நிர்வாகத்தினர் முறையான சாலை பராமரிப்பு மேற்கொள்ளாததால் கரூர் மாவட்டத்தில் சாலை விபத்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.

இதனைத் தொடந்து சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்ட கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் இப்பிரச்சினை குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

சாலையை பராமரிக்க தவறிய சுங்கசாவடி
சாலையை பராமரிக்க தவறிய சுங்கசாவடி

இது குறித்து மாவட்ட ஆட்சியர், சுங்கசாவடி நிர்வாகத்திற்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். ஆனால் அவரின் பரிந்துரையை ஏற்க மறுத்து சுங்க சாவடி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டுவந்தது.

இது ஒன்றிய அரசின் சாலை பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருவதால், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் சுங்க சாவடி நிர்வாகத்தின் அலட்சியம் குறித்து தேசிய நெடுஞ்சாலை திட்ட மேலாளருக்கு கடிதம் ஒன்றை கடந்த சில நாள்களுக்கு முன்பு எழுதினார்.

தேசிய நெடுஞ்சாலைகளில் பராமரிப்பு பணிகள்
தேசிய நெடுஞ்சாலைகளில் பராமரிப்பு பணிகள்

அதில், “பொது மக்களிடம் வரி வசூல் செய்து அதன்மூலம் சாலையை பராமரிப்பதற்காக ஒப்புக்கொண்ட சுங்கச்சாவடி நிர்வாகம் ஏன்? கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பை மேற்கொள்ளவில்லை.

இது குறித்து 10 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்க்கொள்ளாவிட்டால், சுங்க கட்டணம் வசூல் செய்யும் முறையை ரத்து செய்வது குறித்து மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்க நேரிடும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்பு பணிகள், கடந்த ஒரு வார காலமாக தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனை இன்று (ஜன.21) கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், “நெடுஞ்சாலைத்துறை சுங்கசாவடி பராமரிப்பு பணிகள் திருப்தி அளித்தால் சுங்க சாவடி நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட நோட்டீஸ் திரும்பப் பெறப்படும். மாறாக பராமரிப்பு பணியில் குறைபாடுகள் இருந்தால் மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது தேசிய நெடுஞ்சாலை மேலாளர் முருகபிரகாஷ், நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: சென்னை விமானநிலையத்தில் நவீன பாதுகாப்பு சாதனங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.