கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 45 நாள்களாக மதுபான கடைகள் மூடப்பட்ட நிலையில் நேற்று முதல் அனைத்து மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் தோகைமலை அடுத்துள்ள காவல்காரன்பட்டியில் அரசு மதுபான கடை திறக்கப்பட்டுள்ள நிலையில் அதை மூட வலியுறித்து அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் காவல்காரன்பட்டி அடுத்துள்ள ராச்சாண்டார் திருமலை பகுதியானது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பகுதியாகும். ஆர்.டி.மலைப்பகுதி மக்கள் மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்கள் அனைவரும் காவல்காரன்பட்டி வழியாக மதுபான கடைக்கு வந்து சென்று வருகின்றனர்.
இதனால் காவல்காரன்பட்டிக்கும் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டதால், அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் மதுபான கடையை உடனடியாக மூட போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக பெண்கள் போராட்டத்தில் அரசு கூறும் நிபந்தனைகள் ஆன திருமணம், இறுதிச் சடங்கு போன்ற நிகழ்வுகளை புறக்கணித்து வருகிறோம். ஆனால் அரசு மதுபான கடைகளை திறப்பதன் முக்கிய அவசியமென்ன எனவும், கூட்டம் கூட்டமாக மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சொல்லும் அரசு, மதுபான கடைகள் மூலம் கூட்டம் சேர்ப்பது ஏன் என்றும் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
காவல்காரன்பட்டி பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ரயில் மோதி தொழிலாளர்கள் பலி - எடப்பாடி பழனிசாமி இரங்கல்!