ETV Bharat / state

மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட கரோனா எதிர்ப்பு மருந்து - free corona tablets given karur to boost immunity

கரூர்: மாயனூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஹோமியோபதி மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.

இலவசமாக வழங்கப்பட்ட கரோனா எதிர்ப்பு மருந்து

author img

By

Published : Oct 31, 2020, 9:47 PM IST

கரூர் மாவட்டம் மாயனூரில் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டும் உடலில் நோ எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காகவும் ஆர்சனிக் ஆல்பம்-30சி ஹோமியோபதி மருந்தை தனியார் தொண்டு நிறுவனம், ஹோமியோபதி மருத்துவர் ஹரி ஹரன் ஆகியோர் இணைந்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர்.

கரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் இந்த ஆர்சனிக் ஆல்பம்-30சி மருந்தை எடுத்துக்கொள்ளுமாறு மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. மத்திய அரசு மட்டுமின்றி தமிழ்நாடு அரசும் இதனை பரிந்துரைத்துள்ளது.

கிராமப்புற மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காகவும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை பொதுமக்கள் உட்கொள்வதன் மூலம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன் மனிதனின் மூச்சுக்குழாய், நுரையீரலை தூண்டி சுவாச உறுப்புகளின் செயல் திறனை அதிகரிக்கிறது.

இதன் மூலம் தொற்று பாதிப்புக்கு ஆளானாலும் வைரசை கட்டுப்படுத்த முடியுமென்றும், இந்த மருந்தை உட்கொள்ளும்போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று நாள்கள் வெறும் வயிற்றில் எடுத்துக்கொண்டு அதன் பிறகு ஒரு மாதம் கழித்து மீண்டும் மருந்தை எடுத்துக்கொள்ளலாம் என ஹோமியோபதி மருத்துவர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இதையும் படிங்க... ”ஏழை மக்களுக்கு இலவச கரோனா தடுப்பூசி” - ம.பி முதலமைச்சர் உறுதி!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.