ETV Bharat / state

காவல் நிலையத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 திருநங்கைகள் கைது - முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கரூர் நகர காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கில் நான்கு திருநங்கைகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருநங்கைகள் கைது
திருநங்கைகள் கைது
author img

By

Published : Nov 12, 2022, 10:49 PM IST

கரூர் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த திருநங்கைகள் சிலர், நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய மக்கள் கூடும் பகுதிகளில் நின்று யாசகம் கேட்பது போல நின்று வழிப்பறி செய்வது, ஆண்களை குறி வைத்து மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பணம், நகை உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு விரட்டியடிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டன.

இது சம்பந்தமாக கரூர் நகர காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளும் போது, ஒன்றாக கூடும் திருநங்கைகள் சிலர் காவல் துறையினருக்கு எதிராக அராஜக செயலில் ஈடுபடுவது தொடர்ந்து வந்தது. இதனிடையே இன்று (நவ.12) கரூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மினிபஸ் நிலையத்தின் கழிவறை அருகே இருந்த இளைஞர் ஒருவரிடம் இருந்து இரண்டு அரை பவுன் தங்கச் செயினை பறித்ததாக, கரூர் நகர காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் இசைப்பிரியா (24), ராகவி (22), தில்ஷிகா(23) இனியா(22) ஆகிய நான்கு பேரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அப்போது, திருநங்கைகள் சிலர் காவல் துறையினரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கரூர் எஸ்பி உத்தரவின் பேரில் கரூர் அதிவிரைவு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தகராறில் ஈடுபட்ட திருநங்கைகளை கரூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

கரூர் நகர காவல் நிலையத்தின் முன்பு கரூர் மாவட்டத்தில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் கூடி போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கரூர் நகர காவல் நிலையத்தின் முன் பக்க கதவு திடீரென மூடப்பட்டது. பின்னர் கரூர் நகர் பகுதியில் உள்ள மற்ற திருநங்கை குழு தலைவிகளிடம் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் திருநங்கைகள் குறித்து எடுத்துரைத்து, குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் திருநங்கைகளுக்கு ஆதரவு கூறக்கூடாது என எடுத்துரைக்கப்பட்டது.

திருநங்கைகளின் தலைவிகள் இதனை ஏற்றுக் கொண்டதை அடுத்து, குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு திருநங்கைகள் மீது மாலை 5 மணிக்கு மேல் கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து நான்கு திருநங்கைகளை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ள திருநங்கைகள் தனி சிறை பிரிவில் அடைக்கப்பட்டனர்.

திருநங்கைகளிடம் பணம், நகை பறிகொடுத்த இளைஞர்கள் சிலர், கரூர் நகர காவல் நிலையம் முன்பு கூடினர். அவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, பணம் இல்லை என்றாலும் gpay மூலம் 5000 முதல் 10,000 ரூபாய் வரை வழுகட்டயமாக கைபேசியை பிடுங்கி, அவர்களது வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்பிக் கொள்வது உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் திருநங்கைகள் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினர். இதுகுறித்து வெளியே தெரிந்தால் அவமானமாக இருக்கும் என கருதி இத்தனை நாள் பணம் பறி கொடுத்த வேதனையில் இருந்ததாக தெரிவித்தனர்.

தொடர்ந்து இது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர் மீது கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருநங்கைகள் பலர் படித்து, நல்ல வேலை, தொழில் என மரியாதையான வாழ்க்கையை வாழத் தொடங்கியுள்ள நிலையில் இது போன்ற சில திருநங்கைகளின் அராஜக, வன்முறை, குற்றச் செயல்கள் சமூகத்திடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: ஊராட்சி துணைத் தலைவருக்கான தேர்தல் 5வது முறையாக ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.