ETV Bharat / state

ஆளுங்கட்சிக்கு ஒரு சட்டம் எதிர்க்கட்சிக்கு ஒரு சட்டமா? - ஜெயக்குமார் ஆவேசம் - ஆளுங்கட்சி

ஆளுங்கட்சி குற்றத்தில் ஈடுபட்டால் வெறும் வழக்குப்பதிவு மட்டுமே, ஆனால் எதிர்க்கட்சியினர் குற்றத்தில் ஈடுபடாவிட்டாலும் பொய் வழக்குபோட்டு கைது செய்வார்கள், எதிர்க்கட்சிக்கு மட்டுமே சட்டம், ஆளுங்கட்சிக்கு சட்டமில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

Etv Bharat  செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார்
Etv Bharatசெய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார்
author img

By

Published : Jan 6, 2023, 6:44 PM IST

ஆளுங்கட்சிக்கு ஒரு சட்டம் எதிர்க்கட்சிக்கு ஒரு சட்டமா? - ஜெயக்குமார் ஆவேசம்

கரூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக அதிமுக நிர்வாகிகள் மீது பொய்வழக்கு போடப்பட்டு வருவதாகவும், குற்றத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்பதைக் கண்டிக்கும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், 'திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கின்ற சூழலில், கரூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கே இல்லை. குறிப்பாக அணில், அமாவாசை என்ற பெயரில் அழைக்கப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி காவல் துறை, ஆட்சியர் ஆகியோரை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு கரூரை ஆட்டிப்படைக்கிறார்.

கரூரில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், கடந்த 19ஆம் தேதி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கார் மீது ஆசிட் மற்றும் கற்களை வீசிவிட்டு அதிமுகவைச் சேர்ந்த திருவிகா என்பவர் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டார். போதுமான ஆதாரங்கள் இருந்தும் காவல் துறையினர் கடத்திய நபர்கள் மீது வெறும் வழக்குப்பதிவு மட்டுமே செய்து, அதிமுகவினர் 72 பேர் மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதேபோல கரூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக செந்தில் பாலாஜி உத்தரவின் பேரில் அதிமுகவினர் பொய் வழக்குபோட்டு வருகின்றனர். ஆளுங்கட்சி குற்றத்தில் ஈடுபட்டால் வெறும் வழக்குப்பதிவு மட்டுமே, ஆனால் எதிர்க்கட்சியினர் குற்றத்தில் ஈடுபடாவிட்டாலும் பொய் வழக்குபோட்டு கைது செய்வார்கள்.

ஆளுங்கட்சிக்கு சட்டமில்லை, எதிர்க்கட்சிக்கு மட்டுமே சட்டம் உண்டு; இதுதான் திராவிட மாடலா?. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரம் இருப்பதால் ஆடுகிறார். அவரின் பேச்சை கேட்டு காவல் துறை எஸ்.பி, மாவட்ட ஆட்சியர் எல்லாம் ஆடுகின்றனர். ஆட்சி மாறினால் அனைவரும் பதிலளிக்க வேண்டும்’ என்றார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தக்க ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளதாகவும், வழக்கில் சம்மந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்வதாக டிஜிபி தெரிவித்ததாகவும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தேசிய ஒதுக்கீட்டில் நிரம்பாத மருத்துவ இடங்களை தமிழ்நாட்டிற்கு வழங்குக: அமைச்சர் மா.சு வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.