ETV Bharat / state

அறையின் உள்புறம் தாழிட்டு சிக்கிக்கொண்ட 1 வயது குழந்தை பத்திரமாக மீட்பு

விளையாடுகையில் அறையின் உள்புறம் தாழிட்டு சிக்கிக் கொண்ட ஒன்றரை வயது குழந்தையை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்டனர்.

author img

By

Published : Nov 7, 2021, 4:10 PM IST

குழந்தை பத்திரமாக மீட்பு
குழந்தை பத்திரமாக மீட்பு

கரூர்: தான்தோன்றிமலை அருகே உள்ள காளியப்பன் ஊராட்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர், ரகுநாதன். இவரது வீட்டிற்கு தீபாவளி பண்டிகையைக் கொண்டாட திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த உறவினர் சிவசங்கரன் வந்துள்ளார்.

சிவசங்கரனின் ஒன்றரை வயது மகன் தர்ஷித் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது, காணாமல் போனதையடுத்து அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.

பின்னர் வீட்டினுள் இருந்த ஒரு தனிஅறையில் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டது. அறையைத் திறக்க முயன்றபோது, அறையின் உள்புறம் தாழிடப்பட்டு குழந்தை சிக்கிக் கொண்டது தெரியவந்தது.

அறையின் உள்புறம் தாழிட்டு சிக்கிக் கொண்ட 1 வயது குழந்தை பத்திரமாக மீட்பு

செய்வதறியாது தவித்த குடும்பத்தினர், இதுகுறித்து கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் விரைந்து சென்ற தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான குழுவினர், அறையில் சிக்கி இருந்த குழந்தையை ஒரு மணி நேரத்திற்குப் பின் பத்திரமாக மீட்டனர்.

குழந்தையை பத்திரமாக மீட்டுக் கொடுத்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் கனமழை: குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் மக்கள் அவதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.