கரூர் மாவட்டம் பரமத்தி காருடையம்பாளையம் பகுதியில் வசித்துவரும் பழனிச்சாமி என்பவரது வீட்டில், நேற்று (மார்ச் 10) மாலை தீப்பற்றியது. இந்த விபத்தில் வீடு முழுவதும் நாசமாகி தரைமட்டமானது. அந்த வேளையில், வீட்டின் உரிமையாளர் வெளியில் சென்றதால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டவில்லை. பின்னர் தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதன்பின் மின்கசிவால் தீப்பற்றி இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வயல்காட்டில் ஏற்பட்ட தீயால் 25 ஆட்டு குட்டிகள் உயிரிழப்பு