கரூர் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கக் கோரி கரூர் நாடக நடிகர் சங்கத்தினர் இசைக்கருவிகளை வாசித்தும் எமதர்மன், நாரதர் உள்ளிட்ட வேடமிட்டு கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஏப்12) மனு அளிக்க வந்தனர்.
அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் தங்கள் கோரிக்கை மனுவினை போட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கரூர் நாடக நடிகர் சங்கத்தின் தலைவர் செல்வராஜ், “தற்பொழுது தமிழ்நாட்டில் 50 சதவீத அனுமதியுடன் திரையரங்குகள் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. அதேபோல திருமண நிகழ்ச்சிகளும் நூறுபேர் கூடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களை நம்பி வாழும் நாங்கள், கடந்த ஆண்டு பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் திருவிழாவுக்கு தடை என்ற அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. எனவே 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒன்றிணைந்து கரூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்தோம், புகார் பெட்டியில் கோரிக்கை மனுவை வைத்து விட்டுச் செல்கிறோம்.
இதையும் படிங்க: இடி தாக்கி இரண்டு பசு மாடுகள் உயிரிழப்பு!