கரூர் மாவட்டம் வெங்கமேட்டில் உள்ள ஸ்ரீஅன்னை வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் அக்னீஸ்வரர் என்ற புதிய கட்டடம் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பிரபல நகைக் கடையின் உரிமையாளர் கல்யாணராமன், அவரது மகன்கள் சீத்தாராமன், ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.
இந்த பள்ளியானது கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா மணிவண்ணனுடைய கணவரின் பள்ளியாகும். ஆனால் இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா மணிவண்ணன் கலந்து கொள்ளவில்லை. மேலும் இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள் என ஏறாளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:சிஏஏ நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது - திருமாவளவன் எம்.பி.