ETV Bharat / state

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை, தமிழில் வெளியிட கோரிக்கை! - சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை

கரூர் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் அனுமதியின்றி இயங்குவதாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் குற்றச்சாட்டியுள்ளார்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் கோரிக்கை

author img

By

Published : May 3, 2022, 12:17 PM IST

Updated : May 3, 2022, 6:57 PM IST

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(மே.02) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முகிலன், ”பல்லுயிர் சூழலுக்கு ஒரு அங்கமாக விளங்க கூடிய சிறிய உயிரினமான தேவாங்குகள் கடவூர் வனப்பகுதியில் சுமார் 9 ஆயிரம் இருப்பதை கணக்கீடு செய்து தேவாங்கு சரணாலயமாக அமைக்க தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்த கரூர் மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட வனத்துறை அலுவலர்கள் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கும் மனு ஒன்று வழங்கப்பட்டது.

அதேபோல கரூர் மாவட்டத்தில் அனுமதி காலம் முடிந்தும் சட்டவிரோதமாக இயங்கும் கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் 350-க்கும் அதிகமான குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் அரசு அனுமதியுடன் இயங்கவில்லை. சுமார் 200-க்கும் அதிகமான குவாரிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை, தமிழில் வெளியிட கோரிக்கை

மீதமுள்ள குவாரிகள் அனைத்தும் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. இதுகுறித்து மாவட்ட புவியியல் சுரங்கத்துறை அலுவலகத்துக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு புகார்கள் கொடுக்கப்படும். எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. கடந்த மூன்று மாதத்தில் மட்டும் அனுமதியின்றி செயல்பட்ட கல் குவாரிகளில் 3 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் பரமத்தி குப்பம் கிராமத்தில் உள்ள என்டிசி கல்குவாரியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கருத்துக்கேட்பு கூட்டம் : கல்குவாரி உரிமையாளர்கள் உயிர் இழப்பை சரிகட்ட அலுவலர்களுக்கும், உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கும் சில ஆயிரங்களை கொடுத்து உயிரிழப்பை மூடி மறைத்து விட்டு கனிம வளங்களை தொடர்ந்து கொள்ளையடித்து வருகின்றனர். இக்கல்குவாரியில் அனுமதியின்றி 400 அடிக்கு கீழ் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 50 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கும்.

கல்குவாரியில் உயிரிழப்பு நடைபெற்றதற்கு கல்குவாரி உரிமையாளரையும் அனுமதியின்றி கல்குவாரி இயங்க உறுதுணையாக இருந்த மாவட்ட சுங்கத்துறை அலுவலர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ஆகியோர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆகவே மாவட்ட ஆட்சியர் சீரிய நடவடிக்கை எடுத்து அனுமதி இல்லாமல் இயங்கி வரும் குவாரிகளை கண்டறிந்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

இதேபோல சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை பல்வேறு மாவட்டங்களில் தமிழில் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கரூர் மாவட்டத்தில் மட்டும் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டு வருகிறது.எதிர்வரும் மே 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கடவூர் அருகே உள்ள சிந்தாமணிபட்டி வரவணை கிராமத்தில் கல்குவாரி கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் கல்குவாரிகள் காற்று நீர் மண் ஒளி சமூக பொருளாதார சூழல் பல்லுயிர் சூழல் எவ்வாறு பாதிக்கப்படும் என்றும், அதை எவ்வாறு சரி செய்வோம் என கல்குவாரிகள் கூறும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை சுமார் 403 பக்கத்திற்கும் மேம்பட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த அறிக்கை தமிழ் மொழியில் இல்லாமல், ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதால் பாதிப்புகள் பற்றி மக்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியாத சூழல் உள்ளது. இவ்வாறு இருக்கையில், எப்படி கருத்து கேட்பு கூட்டத்தில் கிராமப்புறத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவிக்க முடியும்.

எனவே வரவணை கிராமத்தில் நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தும் முன் தமிழில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, பின்னர் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் எனத் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள் விடுக்கிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஈரோடு ஆவின் பால் பண்ணையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆய்வு

Last Updated : May 3, 2022, 6:57 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.