ETV Bharat / state

'ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் காவல் துறை!' - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி

கரூர்: அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் காவல் துறையினர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என்று திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டினார்.

செந்தில் பாலாஜி
author img

By

Published : May 19, 2019, 12:19 PM IST

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் அந்தந்த வேட்பாளர்கள் தங்களது கட்சியின் சார்பாக தற்காலிக கொட்டகை அமைத்து வாக்காளர்களுக்கு தேவையான விவரங்களை அளித்துவருகின்றனர். இதற்கு தேர்தல் ஆணையம் முறையாக அனுமதியும் வழங்கியுள்ளது.

இதனிடையே, திமுக தரப்பில் அமைத்திருந்த கொட்டகையை திருச்சி சரக காவல்துறை தலைவர் லலிதா லட்சுமி கொட்டகையை பிரிக்குமாறு திமுகவினரிடம் கூறியுள்ளார். இதையடுத்து தளவாய் பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தின் முன்பு திருச்சி சரக டிஐஜி லலிதா லட்சுமியிடம் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி விளக்கம் கேட்டு வாக்குவாதம் செய்தார். அப்போது செந்தில் பாலாஜியுடன் திமுக தொண்டர்கள் திரண்டிருப்பதைக் கண்ட காவல் துறையினர், தொண்டர்களை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர்.

செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

தொண்டர்கள் அனைவரும் கலைந்து செல்ல மறுத்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது, 'ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடி மையங்களில் மக்களிடம் வாக்கு சேகரிக்கின்றனர். இதற்கு காவல் துறை துணை போகிறது. இது குறித்து உயர் அலுவலர்களிடம் நான் முறையிடப் போகிறேன்' என்று அவர் தெரிவித்தார்.

Intro:ஆளுமா திமுக கட்சிக்கு காவல்துறை ஆதரவாக செயல்படுகிறது - செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

Body:கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் அருகில் அந்த வேட்பாளர்கள் தன்னுடைய கட்சியின் சார்பாக தற்காலிக கொட்டகை அமைத்து வாக்காளர்களுக்கு தேவையான விவரங்களை அளித்து வருகிறார்கள் அதற்கு தேர்தல் ஆணையம் முறையாக அனுமதி அளித்துள்ளது அதேசமயம் திமுக தரப்பில் இதுபோன்ற கொட்டாய் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டை நீக்கிய திருச்சி சரக காவல்துறை தலைவர் லலிதா லட்சுமி ஆட்சேபனை தெரிவித்து கோட்டையை பிடிக்க கூறியதால் தளவாய் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடக்கும் வாக்குச்சாவடி மையத்தின் முன்பு திருச்சி சரக காவல்துறை தலைவர் லலிதா லட்சுமியிடம் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி விளக்கம் கேட்டு வாக்குவாதம் செய்தார்.

இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி இது குறித்து நான் உயர் அதிகாரிகளுக்கு முறையாக புகார் அளிப்பேன் என தெரிவித்தார் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி பொதுவாக இதுபோன்ற கொட்டாய்கள் வேட்பாளர்கள் உடைய புகைப்படம் மற்றும் வேட்பாளரின் சின்னம் மட்டுமே வாக்காளரிடம் காட்டி அவர்கள் ஆதரவு கேட்கலாம் ஆனால் ஆளும் அதிமுகவினர் இந்த கோட்டையில் இந்த வேட்பாளர்களின் தலைவருடைய புகைப்படங்கள் அனைத்தையும் பொருத்தி தங்களது சின்னத்தை கூறி பிரச்சாரம் செய்வது போல் மக்களிடம் வாக்கு சேகரிக்கின்றனர் இதற்கு காவல்துறை துணை போகின்றனர் இதுகுறித்து உயர் அதிகாரியிடம் நான் முறை ஆடப் போகிறேன் என தெரிவித்தார்.

TN_KRR_01_19_DMK_CANDIDATE_SENTHILBALAJI_BYTE_TN7205677

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.