ETV Bharat / state

’அதிமுகவின் புகாருக்கு அஞ்சப்போவதில்லை’ - செந்தில் பாலாஜி - sand theft issue

கரூர்: ”அதிமுகவினர் தேர்தல் ஆணையத்தில் என் மீது அளித்த புகார் குறித்து நான் அஞ்சப்போவதில்லை” என திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அதிமுக-வின் புகாருக்கு அஞ்சபோவதில்லை - செந்தில்பாலாஜி

author img

By

Published : Mar 19, 2021, 1:09 PM IST

கரூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி நேற்றிரவு (மார்ச்.18) நெரூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுகவினர் தேர்தல் ஆணையத்தில் என் மீது புகார் அளித்துள்ளார்கள். கரூர் மாவட்டம் தவிர்த்து காவிரி ஆற்றில் மணல் எடுக்க நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் பொதுப்பணித்துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதியுடன் உள்ளூர் தேவைகளுக்கு மணல் அள்ள உரிய அனுமதியை அரசு வழங்கியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் மட்டும் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இரவு நேரங்களில் காவிரி ஆற்றங்கரையில் மாட்டு வண்டி மூலம் மணல் எடுக்க கடந்த ஐந்து ஆண்டுகளில் சில நாள்கள் அனுமதித்தார்கள். பல நாள்கள் அனுமதி மறுத்தார்கள். உள்ளாட்சித் தேர்தலின்போது அதிமுகவினர் மாட்டுவண்டி உரிமையாளர்களை மிரட்டி ”அதிமுகவுக்கு வாக்களித்தால்தான் மீண்டும் மணல் அள்ள அனுமதி பெற்று தருவோம்” எனக் கூறினர்.

’அதிமுகவின் புகாருக்கு அஞ்சபோவதில்லை’ - செந்தில் பாலாஜி

மேலும், பல ஆண்டு காலமாக கரூர் மாவட்டத்தில் நடைமுறையிலிருந்த உரிமையை அதிமுக அரசு பறித்திருக்கிறது. இதனால் சுமார் 15,000 மாட்டுவண்டி உரிமையாளர்கள் வயிற்றில் அதிமுக அரசு அடித்திருக்கிறது. மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு தினந்தோறும் கிடைக்கும் 1,500 ரூபாய் வருமானத்தில் மாட்டுத்தீவனம் 500 ரூபாய், மணல் அளிப்பதற்கான கூலி 500 ரூபாய் போக, மீதம் கூலி 500 ரூபாய் மட்டுமே கிடைக்கும் சூழல் உள்ளது” எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க...கடலூர் தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும், களநிலவரமும்...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.