ETV Bharat / state

தேர்தல் முறையாக நடக்கிறதா என்ற கேள்வி எழுகிறது - செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு - திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி

கரூர்: கூடுதல் இணைப்பு வாக்காளர் பட்டியலில் குளறுபடி மற்றும் வாக்குப் பதிவு மையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை என அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

senthil-balaji
senthil-balaji
author img

By

Published : Dec 27, 2019, 10:16 AM IST

கரூர் மாவட்டம் தாந்தோனி, க.பரமத்தி, கரூர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு ஒன்றியங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

தற்போது கரூர் ஒன்றியம் ராமேஸ்வரம் பட்டியில் திமுக அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான செந்தில் பாலாஜி வாக்குப்பதிவு செய்தபின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், இதுவரை தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஒன்றியங்களுக்கு என மொத்தமாக நடைபெற்ற இந்த தேர்தல் தற்போது ஒன்றியங்களுக்கு மட்டும் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு மையங்களுக்குள் கேமராக்கள் வைக்கப்பட்டு வாக்குப்பதிவை பதிவு செய்து வந்தனர்.

ஆனால் தற்போது நடைபெறுகின்ற உள்ளாட்சித் தேர்தலில் கேமராக்கள் பொருத்தப்படவில்லை. கூடுதல் இணைப்பு வாக்காளர் பட்டியலில் குளறுபடி நடந்துள்ளது. இந்த தேர்தல் முறையாக நடக்கிறதா என்ற கேள்வி எழுகிறது என கூறினார்.

இதையும் படிங்க...

‘மக்கள் மாற்றத்தை விரும்பிவிட்டார்கள்... திமுக கூட்டணிக்குதான் வெற்றி’

Intro:கூடுதல் இணைப்பு வாக்காளர் பட்டியலில் குளறுபடி, வாக்கு பதிவு மையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை - முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

Body:கரூர் மாவட்டம் தாந்தோனி, க.பரமத்தி, கரூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய நான்கு ஒன்றியங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

தற்பொழுது கரூர் ஒன்றியம் இராமேஸ்வரம் பட்டியில் திமுக அரவகுறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கரூர் மாவட்ட திமுக செயலாளரும் ஆன செந்தில் பாலாஜி வாக்களித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், இதுவரை தமிழகத்தில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஒன்றியங்களுக்கு என மொத்தமாக நடைபெற்ற இந்த தேர்தல் தற்போது ஒன்றியங்களுக்கு மட்டும் நடைபெற்று வருகிறது மேலும் சட்டமன்ற தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு மையத்திற்குள் கேமராக்கள் வைக்கப்பட்டு வாக்குப் பதிவை பதிவு செய்து வந்தனர் ஆனால் நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் கேமராக்கள் வைக்காமல் தேர்தலை முறையாக நடத்தவில்லை என குற்றம் சாட்டினார்.

மேலும் நேற்று இரவு நடைபெறுகின்ற 4 ஒன்றிய மன்ற தேர்தலில் காண கூடுதல் இணைப்பு வாக்காளர்களுக்கான பட்டியல் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக எந்த ஒரு புகைப்படமும் இல்லாமல் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்தப் பட்டியல் ஆளும் கட்சியான அதிமுக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது மற்ற அரசியல் அங்கீகாரம் உள்ள மற்ற கட்சியினருக்கு வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரை தொடர்பு கொண்டு பேசிய பொழுது இதுகுறித்து அலுவலகத்தில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் என அலட்சியமாக பதில் அளித்துவிட்டார் மேலும் இந்த தேர்தல் முறையாக நடக்கிறதா என கேள்விக்குறியாக இருக்கிறது என கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.