கடந்த மார்ச் 11ஆம் தேதி வெளியிடப்பட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில், அதிமுகவின் கிருஷ்ணராயபுரம் தனி சட்டப்பேரவை தொகுதியை எதிர்பார்த்து காத்திருந்த முன்னாள் உறுப்பினர் (2011) எஸ். காமராஜ் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அக்கட்சியில் இருநது விலகிய அவர், ஸ்டாலின் முன்னிலையில், நேற்று (மார்ச்.14)திமுகவில் இணைந்தார்.
இதேபோல், கரூர் மாவட்ட திமுக முக்கிய நிர்வாகியான முன்னாள் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் (2006) பி. காமராஜ், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். திமுக வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறாததால், அவர் அதிமுக இணைந்ததாகக் கூறப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் ஒரே பெயரைக் கொண்ட முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அடுத்தடுத்து கட்சி தாவியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க தற்போது கிருஷ்ணராயபுரம் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள கீதா இம்முறை போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், அவரும் அணி மாற தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க:1996 தேர்தல்! - மொடக்குறிச்சியால் விழி பிதுங்கிய தேர்தல் ஆணையம்!