ETV Bharat / state

கரூரில் அகழ்வாராய்ச்சி பணிக்கு வாய்ப்பு - மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்

கரூர் மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி பணி மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ளது என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

அகழ்வாராய்ச்சி பணிக்கு வாய்ப்பு
அகழ்வாராய்ச்சி பணிக்கு வாய்ப்பு
author img

By

Published : Jul 18, 2021, 3:36 PM IST

கரூர் அருங்காட்சியகம், சேரர் அகழ்வைப்பகம் ஆகியவற்றில் பராமரிக்கப்பட்டு வரும் நடுகல், சுடுமண்ணில் செய்யப்பட்ட பண்டையகால பொருட்களை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பார்வையிட்டார்.

அப்பொழுது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "கடந்த 2000ஆம் ஆண்டு முதல் கரூர் மாவட்டத்தில் தொல்லியல் துறை, அருங்காட்சியகத்துறை சார்பில் இரண்டு அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்பொழுது பழைய திண்டுக்கல் சாலையில் 2010ஆம் ஆண்டு முதல் அரசு அருங்காட்சியகம் இடம்மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகின்றது.

அகழ்வாராய்ச்சி பணிக்கு வாய்ப்பு

அரசு அருங்காட்சியகம்:

அருங்காட்சியத்தில் இசைக்கருவிகள், ஓவியங்கள், நாணயங்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட அரிய வகைப் பொருட்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இது பொதுமக்கள் அனைவரும் காண வேண்டிய இடமாக இருக்கிறது.

அகழ்வைப்பகம், அருங்காட்சியகம் ஆகிய இரண்டும் ஒரே இடத்தில் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் அரசு அருங்காட்சியமாக மாற்றி அமைக்கப்படும்" என்றார்.

அகழ்வாராய்ச்சி பணிக்கு வாய்ப்பு

கரூர் மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி பணி நடப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "கரூர் மாவட்டத்தில் சில இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அடுத்த கட்டமாக விரைவில் அகழ்வாராய்ச்சி பணி மேற்கொள்ளப்படும்.

ஏற்கனவே கரூர் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற பழமையான பொருட்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதனை பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கு புதிய இடம் விரைவில் தேர்வு செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்படும்" என்றார்.

கடந்த 1980ஆம் ஆண்டு கரூர் நகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பழமையான வரலாற்றுப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதனை கீழடி போன்று அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: ஏலத்தில் பல மில்லியனுக்கு விலைபோன 3 கொம்புகள் கொண்ட டைனோசர் எலும்புக்கூடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.