ETV Bharat / state

குடும்பத் தகராறில் தாய், மகள் விஷமருந்தி தற்கொலை - தாய் மகள் தற்கொலை

கரூர்: குடும்பத் தகராறில் திருச்செங்கோட்டைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

daughter-and-mom-committed-suicide
author img

By

Published : Aug 2, 2019, 2:46 AM IST

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் ராஜா(42). இருசக்கர வாகன மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவருக்கும், இவரது மனைவி சுதாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் தனது மகள் சாக்ஷியாவுடன், அண்ணன் வீட்டில் சுதா வசித்து வந்துள்ளார். இருந்த போதிலும், தினமும் தொலைபேசி வாயிலாக சுதாவை தொடர்புகொண்டு ராஜா தவறாக பேசியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மகள் சாக்ஷியா, அம்மாவை (சுதா) திட்டினால் நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்வோம் என்று தந்தை ராஜாவிடம் கூறியுள்ளார். ஆனால், அவர் இதை பொருட்படுத்தவில்லை.

தாய்,மகள் தற்கொலை

இந்நிலையில், கரூர் மாவட்டம் நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் சுவாமி கோயிலுக்கு சென்ற சுதா மற்றும் மகள் சாக்ஷியா, அருகில் இருந்த தென்னந்தோப்பிற்கு சென்று விஷமருந்தியுள்ளனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த சாக்ஷியா அங்கேயே இறந்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சுதா உயிர் போகும் நிலையில் கூச்சலிட்டுள்ளார். இதையறிந்த அருகிலிருந்தவர்கள் சுதாவை மீட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுதா இறந்து விட்டார். இதுகுறித்து வாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:
குடும்பத் தகராறில் திருச்செங்கோட்டை சேர்ந்த தாய் மற்றும் மகள் இருவரும் கரூரில் விஷம் அருந்தி தற்கொலை
Body:
கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் தாய்-மகள் 2 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர் விஷம் அருந்தி மகள் கொலையுண்ட நிலையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தாயை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர். இது குறித்து வாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் விசாரணையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட தாய் மகள் இருவரும் திருச்செங்கோட்டை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது திருச்செங்கோடு பகுதியில் இரண்டு சக்கர வாகன மெக்கானிக்காக பணியாற்றி வருபவர் ராஜா வயது 42 இவரது மனைவி சுதா வயது 40 மகள் சாரா வயது 16 ராஜாவுக்கும் அவரது மனைவி சூர்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவது வழக்கம் இதனால் சுதா தனது மகள் சுதாவை அழைத்துக்கொண்டு தனது அண்ணன் வீட்டில் தனியாக வசித்து வந்தார் இருந்த போதிலும் ராஜா அடிக்கடி இரவு நேரங்களில் போன் செய்து சுதாவை தவறாக பேசியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மகள் சாஷிகா தொலைபேசியில் பேசிய தனது தந்தையிடம் நீங்கள் இவ்வாறு அடிக்கடி அம்மாவைத் திட்டினால் நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறியுள்ளார் ஆனால் அதை ராஜா அலட்சியமாக நினைத்துள்ளார் இந்த நிலையில் திருச்செங்கோட்டில் இருந்து கரூர் மாவட்டம் நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் சுவாமி கோயிலுக்கு மொபட்டில் வந்த சுதா மற்றும் சாட்சியா அங்கு கோவிலில் நீண்ட நேரம் சாமி கும்பிட்டுவிட்டு அங்கேயே தங்கி உள்ளனர் பிறகு வீடு திரும்பலாம் என்று நினைத்தவர்களுக்கு வீடு திரும்பினால் தந்தை மீண்டும் தங்களை திட்டுவார் என்று நினைத்து அருகில் உள்ள தென்னந்தோப்பிற்கு சென்று விஷமருந்தி உள்ளனர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த சாஷிகா அங்கேயே இறந்து விட்டார் இதனால் திடீரென்று அதிர்ச்சி அடைந்த சுதா உயிர் போகும் நிலையில் கூச்சலிட்டுள்ளார் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் திருச்செங்கோட்டை சேர்ந்த இருவரும் தாய் மகள் இருவரும் கரூர் தென்னந்தோப்பில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வாங்கல் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.