ETV Bharat / state

தினந்தோறும் குடிநீர் விநியோகம்: அமைச்சர் செந்தில் பாலாஜி - karur

கரூர்: கரூர் நகராட்சி பகுதி மக்களுக்கு தினம்தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
author img

By

Published : Jul 21, 2021, 11:39 PM IST

கரூர் நகராட்சியின் குடிநீர் பயன்பாட்டிற்காக வாங்கல் காவிரி ஆற்றுப் பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (ஜூலை 21) பார்வையிட்டார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ கரூர் நகராட்சி காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மேம்படுத்தப்படாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது காவிரி குடிநீர் திட்டப் பணி போர்க்கால அடிப்படையில் சிறப்புத் திட்டம் மூலம் மேம்படுத்தப்பட உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட குடிநீர் குழாய்களை மாற்றி புதிய குழாய் பதிக்கப்பட உள்ளது.

குடிநீர் நீரேற்று நிலையங்களிலிருந்து பொதுமக்களுக்கு நாள்தோறும் 8 மில்லியன் கனஅடி தண்ணீர் எடுப்பதற்கு பதிலாக 6 மில்லியன் கனடி தண்ணீர் மட்டுமே எடுக்கப்படுகிறது. இந்நிலையினை மாற்ற சுமார் 12 கிலோ மீட்டர் குழாய்களை மாற்றி அமைக்க வேண்டும். இதற்காக ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

கரூர் நகராட்சி காவிரி குடிநீர் திட்டத்தை மேம்படுத்துவதற்காக ரூ. 25 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட உள்ளது. கடந்த ஆட்சியில் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ. 68 கோடி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதையும் ஆய்வு செய்து 30 நாள்களில் காவிரி குடிநீர் திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் .

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

கரூர் நகர் பகுதி மக்கள் பணிக்கு செல்வதற்கு முன்பே தினந்தோறும் காலை 5 மணி முதல் 8 மணிவரை குடிநீர் விநியோகம் செய்யப்படும். இதன் மூலம் மக்களின் குடிநீர் பிரச்னை தீரும்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.